Thursday, March 14, 2013

சூப்பர் சிங்கரில் நித்யஸ்ரீ மகாதேவன்

                  திரையிசை மற்றும் கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயை மீண்டும் சங்கீத மேடைகளில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அவருடைய கணவர் திரு. மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, நித்யஸ்ரீயின் மாமியார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் வீட்டிலிருந்து மாமியாரைக் கவனித்துக்கொள்ளவில்லையாம். இதனால் அவருடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தாயாரின் மறைவுக்குப்பின் அம்மனவுளைச்சல் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு ரூமர். 

                          இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இசை என்பது கடவுள் கொடுக்கும் வரம். எல்லோருக்கும் அவ்வரம் கிட்டுவதில்லை. சமீபத்தில் விஜய் டீவி-யில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஓம் சிவோஹம் பாடலைக் கேட்டபோது Knowledge Surpassing Peace என்பார்களே - அது போன்ற அறிவெல்லாம் கடந்த இறை அமைதி மனதை நிறைத்தது. இப்படிப்பட்ட மன அமைதியை எத்தனை பேரால் பிறருக்கு வழங்க முடியும்? இது ஒரு மிகப்பெரிய வரமல்லவா?

                        இப்படிப்பட்ட ஒரு வரம் கிடைக்கப்பெற்ற நித்யஸ்ரீ, அதை பிறருக்கும் வழங்குவதே நியாயம். தன் தாயாரை ஒரு வேலையாளை அமர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கலாமே திரு.மகாதேவன்? இதற்காக அவர் தன்னையும் வருத்தி, காலமெல்லாம் தன் மனைவியும், பிள்ளைகளும் வருந்தும் படி செய்தது தவறல்லவா? 

 'இது ஒரு புதுவித பரவசம் - மயக்குது இசையென்னும் அதிசயம்............



இவ்வதிசயத்தைக் கைக்கொண்ட எல்லோரும் மானுடத்தை வசப்படுத்தட்டும்.

3 comments:

Prema said...

For you Nithyasri is a Singer,But for her husband Mr.Mahadevan ,Nithyasri is his wife...All her Achievements at Outside will be recognized only if she plays her role well in a family.....the way he chosen is wrong undoubdtedly,But the Expectation from his wife to take care of his mother is not wrong madam...........

மாலா வாசுதேவன் said...

If Ilayaraja is going to say - my wife dint give me any family pressures. she took care of the entire family chores. so i was free to make music, we all admire that great lady and appreciate her. but if nithyashree mahadevan is going to do wat ilayaraja has done we are ready with our laser guns. but this is the situation today - neither women's lib nor women slaves. soceity constituting us are to be blamed

Unknown said...

மனைவி என்பவள் வேலைக்காரி அல்ல . மகாதேவன் என்பவருடைய அம்மாவுக்கு தேவை என்றால் அவர் சேவை செய்ய வேண்டுமே அல்லாமல் அவருடைய மனைவியை வேலைக்காரி ஆக்கி பார்ப்பது ஆணாதிக்கம் என்பது மட்டுமே சரி . பிரேமா சொல்வது மாதிரி குடும்ப கடமை என்பது வேலைக்காரி ரோல் அல்ல. பத்மா மலா எழுதிருந்தது உண்மை என்ற நிலையில் என்னை கேட்டால் மகாதேவனிடமிருந்து நித்தியஸ்ரீ விடுதலை பெற்றுள்ளார் என்பது மட்டுமே சரி

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes