Tuesday, March 17, 2015

ஆண்கள் அழலாமா?

       ஆண்மையைக் குறித்து பல்வேறு ஐடியாக்கள் எக்காலத்திலும் நிலவி வருகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது – ஆண் தன்னுடைய எமோஷன்களை வெளியே காட்டாமல் இருப்பது. ஒரு ஆண்மகன் தன் வருத்தத்தையோ, அழுகையையோ பிறர் பார்க்கக் காட்டுவது பலவீனத்தின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. வீட்டில் உள்ளோரும் இதை சாதாரணமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர். ‘என்னடா பொம்பளப்புள்ள மாதிரி அழுவுற’  என்பது சர்வசாதாரணமாக எல்லா வீடுகளிலும் சொல்லப்படும் ஒரு வசனம். பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் இக்கருத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

          ஆனால் தன்னைப் பார்த்து பார்த்து வளர்த்த அப்பா, அம்மாவின் மறைவுக்கே அழாமல் கல் மாதிரி நிற்கமுடியுமேயானால் இப்படி ஒரு மனிதனால் யாரை முழுமையாக நேசிக்க முடியும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன. தன் தாயாருக்காகக் கண்ணீர் வடிக்கும் ஒரு ஆண். அவ்வப்போது அருகில் வந்து அவனது கண்ணீரைத் துடைத்துச் செல்லும் அவன் மகள் – என்ன ஒரு அருமையான காட்சி. மறைந்த ஆன்மா சாந்தியுற்றிருக்கும். தன் தாயாரை நினைத்து அழும் கணவனை எந்தப்பெண்ணும் அதிகம் நேசிப்பாள். அம்மாவை இப்படி அன்பு செய்கிறவன், நிச்சயம் என்னையும் அன்பு செய்வான் என்று எண்ணுவதற்கான அத்தாட்சி அந்தக் கண்ணீர்.

        எனவே ஆண்களே நீங்களும் உங்கள் துயரின்போது அழலாம். அது உங்களை இன்னும் ஆண்மைமிக்கவனாகக் காட்டும். மெல்லிய ஆண்மகனையும் பெண்ணுக்குப் பிடிக்கும்.


           இன்னொரு முக்கியமான விஷயம் – பொம்பள மாதிரி அழுற – என்பதெல்லாம் அர்த்தமற்றது. பெண்களின் மனவலிமை அசாத்தியமானது. நெவர் அண்டர் எஸ்டிமேட்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes