Friday, August 4, 2017

கால சர்ப்பதோஷத்திலிருந்து எந்த வயதில் விடுபடலாம்?

கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் தங்கள் வாழ்வின் முதல் பாதியில் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் - பொருளாதாரத் தடை, தொழிலில் முன்னேற்றமின்மை, பெர்சனல் வாழ்விலும் பல இடர்ப்பாடுகள், தோல்விகள், மனவருத்தங்கள்.... உதாரணமாக பாக்யராஜ், இளையராஜா இவர்களின் ஜாதகங்களைக் குறிப்பிடலாம். 

இளையராஜா ஆரம்ப நாட்களில் கிராமத் திருவிழாக்களிலும், நாடகங்களிலும் மிகச் சொற்ப சம்பளத்திற்கு வாசித்துக்கொண்டிருந்தார் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. அதே போல்தான் பாக்யராஜும்.  ஒரு பிரேக் கிடைப்பதற்கு முன் மிகவும் சிரமப்பட்டே முன்னுக்கு வந்திருக்கிறார். முதல் மனைவி மறைவும் இத்துன்பங்களில் அடக்கிக்கொள்ளலாம். அவர்களின் பிற்பாதி வாழ்க்கையில் அவர்கள் அடைந்த உயரங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.

என்ன தான் 30 வயதைக் கடந்து விட்டாலும் காலசர்ப்ப தோஷமுடைய வரனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் இன்றும் தயங்குகின்றனர். என் நெருங்கிய உறவின்ர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் வரன் வந்தது. பையன் காலசர்ப்ப ஜாதகம் உடையவன். எனவே உறவினர் மிகவும் தயங்கி பெண் தர மறுத்துவிட்டார். நான் அதான் முப்பது தாண்டியாச்சுல்ல, இனிமே life சூப்பரா தான் இருக்கும். ஏன் refuse பண்றீங்க என்று கேட்டேன். இல்லம்மா என்னதான் 30 தாண்டினாலும் காலம் முழுக்க அந்த effect இருக்கத் தான் செய்யும் என்றார்.

ஜோதிடரீதியாக இவர் சொல்வது தவறு என்று உதாரணங்களோடு வாதிட முடியும். ஆனாலும் உளவியல் ரீதியாக இவர் சொல்வது சரியே. இளவயதில் அனுபவிக்கும் துன்பம், வாழ்நாள் முழுவதிற்குமான ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டே செல்கிறது. 

உதாரணமாக, ஒரு abusive environmentல் வளரும் குழந்தைக்கு normal family எப்படி இருக்கும் என்று தெரியாது. அக்குழந்தையைப் பொறுத்தவரை அப்பா, அம்மான்னா அடிப்பாங்க என்றுதான் தெரிந்திருக்கும். தான் ஒரு நல்ல பொறுப்பான குடும்பத்தலைவனாகவோ/தலைவியாகவோ ஆகி, தன் பிள்ளைக்கு ஒரு நல்ல குடும்பச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பொழுதுதான், தான் தவற விட்டது எது என்பதை அவர்கள் அறிகிறார்கள். ஓ, அப்பா இப்படிலாம் கூட பிள்ளயோட விளையாடலாமா. அம்மா இவ்ளோ happyஆ இருக்கமுடியுமா என்றெல்லாம் தெரியவரும்போது, தான் miss பண்ண ஒவ்வொரு விஷயமும் விஸ்வரூபமெடுக்கிறது. ஒரு விதமான மனக்கஷ்டத்தை ஏற்படுத்தவே செய்கிறது. (மன வளப் பயிற்சிகளால் வெளியே வர முயற்ச்சிக்கலாம் என்றாலும் கூட)

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்று பாடினார் அவ்வை. இளமையில் அனுபவிக்கும் எவ்விதத் துன்பமும் கொடுமையே. ஏனெனில் ஒரு வாழ்நாளிற்கான காயங்களை ஏற்படுத்திவிட்டே அவை மறைகின்றன.

3 comments:

raji vanchi said...

நல்ல பதிவு மாலா.

மாலா வாசுதேவன் said...

மிக்க நன்றி, வாசித்தமைக்கும், பின்னூட்டத்திற்கும்

Shanthi said...

No therapy can cure childhood scars...your last line is an epic ..😭

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes